மர்மபொருள் வெடித்து பெண்காயம்

கரவெட்டி பகுதியில் மர்மபொருள் வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கோமளா (வயது 36) என்ற பெண் காயமடைந்து செவ்வாய்க்கிழமை (17) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (18) தெரிவித்தனர்.

குறித்த பெண் வயலில் வேலை செய்து விட்டு ஓய்வெடுப்பதற்காக அருகிலிருந்த பற்றைப்பகுதியில் அமர்ந்த போதே, குறித்த மர்மப் பொருள் வெடித்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts