ஆஸியில் இருந்து நாடு திரும்பியவர் புலனாய்வு துறையினரால் கைது

அவுஸ்ரேலியா இருந்து இலங்கை வருகை தந்தவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து கடந்த 2012 /8/12 படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று இரண்டரை வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பி வந்தவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத் தக்க இவர் கடந்த 2012 /8/12 சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றுள்ளார்.

மேலும் 64 பேருடன் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி 28 நாட்கள் கடலில் பயனித்து, அங்கு சென்று வீடு ஒன்றில் பணிபுந்து வந்த போது சுய விருப்பத்தின் பேரில் தான் இலங்கைக்கு திரும்பி வந்ததாக குற்றப் புலனாய்வு துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையினர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திரும்பி வரும்படி புதிய அரசு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts