பாதுகாப்பு வலயத்தில் புதிய நீச்சல் தடாகத்தினை திறந்து வைத்தார் இராணுவத் தளபதி

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீச்சல் தடாகம் மற்றும் ‘கிளப்’ ஆகியன, இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவினால் கடந்த வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென வருகை தந்த இராணுவத் தளபதி தயாரத்னாயக்காவை, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அல்விஸ் வரவேற்றார்.

இதன் பின்னர் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு முன்பாக அமைக்கப் பட்ட பிரமாண்ட மேடையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில் வைத்து, ஒவ்வொரு பிரிவு இராணுவக் கொமாண்டர்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அத்துடன் ஒரு தொகுதி நூல்களும் வழங்கப்பட்டன. இசை நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் பின்னர் தல்செவன விடுதியில் புதிய நீச்சல் தடாகம் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அங்கு ‘கிளப்’ ஒன்றும் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் பங்கேற்றிருந்தனர்.

Related Posts