மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – டக்ளஸ்

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமென்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார்.

dak-thevananthaaa

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் .

கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக வலிகாமம் வடக்குப்பகுதி மக்கள் சொந்த இடங்களிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அகதிமுகாம்களிலும், உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தூரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் நான் தெரிவித்திருக்கின்றேன்.

தமது சொந்தத் தொழில்களையும் இழந்து அவலப்படுகின்றனர். எனவே இந்த மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். யுத்தமில்லாத சூழலில், பாதுகாப்புக்காரணங்களைக் கூறி தொடர்ந்தும் பொதுமக்களின் நிலங்களை வழங்காமலிருக்க முடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வேலையற்றிருக்கும் எமது இளைஞர், யுவதிகளுக்குத் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மேலும் தொழில்வாய்ப்புக்களை அங்கு ஏற்படுத்தி சொந்த பொருளாதார வளர்ச்சியினூடாக எமது மக்கள் வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும் என்றார்.

Related Posts