Ad Widget

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி குறையும்

இம்முறை நடைபெற்று, பெறுபேறும் வெட்டுப்புள்ளியும் வெளியாகியிருந்த ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளி 163 ஆகும். அந்த வெட்டுப்புள்ளி 157 வரை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சில மாவட்டங்களில் வெட்டுப்புள்ளி 152 வரை குறைவடையக் கூடும் என்றும் அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

Related Posts