ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பிலான வாய்வழி மூலமான புதுப்பித்தல்கள் (Oral update) இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை மிஷன் அறிவித்துள்ளது.
இந்த வாய்வழி மூலமான புதுப்பித்தல்கள் நேற்றுபுதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.