சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நாவலர் சிலை திறந்துவைக்கப்பட்டது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிலையைத் திறந்துவைத்தார்.
கொழும்பு நாவலர் நற்பணி மன்றம் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளிலும் நாவலர் பெருமானின் சிலைகளை நிறுவவுள்ளது. அதன் ஒரு அங்கமாக முதலாவது சிலை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, நாவலர் நற்பணி மன்ற தலைவர் கருணைஆனந்தன், தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் உட்பட பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.