யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தி.வேல்நம்பி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14.08.2014) இடம்பெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்துடன் இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் தி,வேல்நம்பி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்பதும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஏற்கனவே கடந்த மூன்றுவருடகாலமாக பீடதிபதியாக பணியாற்றிய இவரது பீடாதிபதிப் பதவிக்காலம் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்குத் தொடரவுள்ளது.
- Monday
- May 12th, 2025