யாழ்.பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று செவ்வாய்க்கிழமை (01) சகமாணவர்கள் மூவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.