குருநகரில் 2 வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

Fire-Logo-குருநகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்.குருநகர் பங்சால் வீதியில் உள்ள 2வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 3ஆவது வீடு அரைவாசி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தீ எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டறியப்படவில்லை. யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts