வட மாகாண குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதார திணைக்களத்தின் முன் இன்று காலை 10 மணி தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது வரை காலமும் தாம் செய்து வந்த மகப்பேற்று சேவையை தாதியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேராதனை வைத்தியசாலையில் பணியாற்றும் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் வைத்தியர்களால் தாக்கப்பட்டு அறைகளில் பூட்டிவைக்கப்பட்டனர். இதன் காரணமாக குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வட மாகாண குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.