சிறுவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.தென்மராட்சி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்வி பிரிவும் வேள்ட்விஷனும் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இன்று காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்பாக ஆரம்பமான பேரணி, ஏ – 9 வீதியூடாக றிபேக் கல்லூரியை சென்றடைந்தது.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் தென்மராட்சி வலய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் பங்குபற்றினர்.