பல்கலைக்கழகங்கள் மீதான அரசியல் தலையீட்டை நிறுத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலை வாயிலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று காலை முன்னெடுத்தனர்.