Ad Widget

வர்த்­த­கர்­க­ளிடம் பொலிஸார் இலஞ்சம் கோரு­வதை நிறுத்­த­வேண்டும். டெனீஸ்­வ­ர­னிடம் வர்த்­த­கர்கள்

lanjam-moneyகாசோலை மோச­டிகள் தொடர்­பாக முறைப்­பா­டு­களைப் பதி­வு­செய்­கின்­ற­போது பொலிஸார் இப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு தம்­மி­ட­மி­ருந்து 10 வீத­மான தொகையை இலஞ்­ச­மாகக் கோரு­கின்­றனர் எனவும் அதனைக் கொடுக்க மறுக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் அப்­பி­ரச்­சி­னை­களை தீர்க்­க­மு­டி­யாது என தெரி­விக்­கின்­றனர் எனவும் யாழ். மாவட்ட வர்த்­த­கர்­களின் பிர­தி­நி­திகள் வடக்கு மாகாண வர்த்­த­கத்­துறை அமைச்சர் பா.டெனீஸ்­வ­ர­னிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

யாழ்ப்­பாண வர்த்­த­கர்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்­பாக வட­மா­காண அமைச்சர் டெனீஸ்­வ­ர­னிற்கும் யாழ். வர்த்­தக சங்கப் பிர­திநி­தி­க­ளுக்­கு­மி­டையில் அண்­மையில் யாழ். வர்த்­தக சங்க மண்­ட­பத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இச் சந்­திப்பில் வர்த்­தக சங்கப் பிர­திநி­திகள் கருத்­துத்­ தெ­ரி­விக்­கையில்,

வடக்கில் தற்­பொ­ழுது தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள திறந்­த­பொ­ரு­ளா­தார கொள்­கைக்­க­மை­வான வியா­பார நட­வ­டிக்­கை­க­ளினால் யாழ். மாவட்டம் உள்­ளிட்ட வட­ப­குதி வியா­பா­ரிகள் கடு­மை­யான பாதிப்­பினை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். மொத்த வியா­பா­ரிகள் அள­வுக்­க­தி­க­மான பொருட்­களை களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்­கின்­றமை, வெளி­மா­வட்ட வியா­பா­ரிகள் வடக்­கி­லுள்ள சந்­தை­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளமை, வங்­கி­களின் நட­வ­டிக்­கைகள், காசோலை மோச­டிகள் போன்ற செயற்­பா­டு­க­ளினால் எமது வர்த்­த­கர்கள் நட்­ட­ம­டைந்து வரு­கின்­றனர்.

வடக்­கி­லுள்ள வியா­பா­ரி­களின் தொழில் நட­வ­டிக்­கைகள் பாதிப்­ப­டைந்­துள்ள நிலையில் இவர்கள் தற்­கொலை செய்­ய­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் வர்த்­தக முறை­கே­டுகள், காசோலை முறை­கே­டுகள் தொடர்­பான பிணக்­கு­களைத் தீர்ப்­ப­தற்­காக பொலி­ஸா­ரிடம் செல்­கின்ற போது பொலிஸார் வியா­பாரி­க­ளிடம் இலஞ்சம் கோரு­வ­தா­கவும் காசோலை மோச­டி­களை தீர்ப்­ப­தற்கு பிணக்­குக்­கு­ரிய இரு பகு­தி­யி­ன­ரி­ட­மி­ருந்தும் பிணக்கு தொகையின் 10 வீதத்தை இலஞ்­ச­மாகக் கோரு­வ­தா­கவும் பல வியா­பா­ரிகள் எம்­மிடம் முறை­யிட்­டுள்­ளனர். இம்­மு­றைப்­பா­டுகள் தொடர்­பாக ஆரா­யு­மி­டத்து வர்த்­த­கர்­களின் முறைப்­பா­டுகள் உண்மை என்­பதை எம்மால் உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தா­க­வுள்­ளது. எனவே இவ் விட­யங்கள் தொடர்­பாக வட­மா­காண சபையில் தெரி­யப்­ப­டுத்தி எமது வியா­பா­ரி­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என தங்­க­ளிடம் கோரிக்கை முன்­வைக்­கின்றோம் என்­றனர்.

தொடர்புடைய செய்தி

வர்த்தகர்களின் பிரச்சனைகளை தீர்க்க நியதிச் சட்டம் கொண்டுவரல் வேண்டும்

Related Posts