Ad Widget

வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

HUMAN RIGHTS COMMISSON OF SRILANKA.இளவாளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளவாளை பகுதியினைச் சேர்ந்த குழந்தையொன்று நேற்று வீழ்ந்து நாடி உடைந்தமையினால், குழந்தையின் தந்தை சிகிச்சை பெறுவதற்காக இளவாளை பிரதேச வைத்தியசாலைக்கு குழந்தையைக் கொண்டுசென்றுள்ளார்.

இருந்தும் அங்கு வைத்தியர் இருக்கவில்லை. வைத்தியருக்காக காத்திருந்த போதும், நீண்ட நேரமாகியும் வைத்தியர் வருவதாகத் தென்படாத காரணத்தினாலும், குழந்தை வலியில் அழுதமையினால் பண்டத்தரிப்பு வைத்தியசாலைக்கு குழந்தையினைக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு இருந்த வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளார் என தாதியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சங்கானை வைத்தியசாலைக்குச் சென்றே குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அந்த குடும்பஸ்த்தர் உடனடியாக மனித உரிமை ஆணைக்குழுவில், கடமை நேரத்தில் வைத்தியசாலையில் இருக்காத வைத்தியரின் செயல் குறித்து முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் மனித உரிமை ஆணைக்குழுவினால், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts