பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர்.

jaffna-univer-city

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னால் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளாந்த கூலியின் (அமைய) அடிப்படையில் பணியாற்றி வந்த எங்களை, வெற்றிடங்களுக்கான புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பில் சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இதனால், தற்போது நாங்கள் வேலையிழந்து நிர்க்கதியாகியுள்ளோம். இந்நிலையில் எமக்கு நியாயமான தீர்வை பல்கலைக்கழக பேரவை, உறுப்பினர் சபை மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியன பெற்றுத்தர வேண்டும்.

அகிம்சை ரீதியிலான இந்தப் போராட்டத்துக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும்’ என்று இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Posts