Ad Widget

வெங்காய பயிர்ச்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிப்பு

onion2யாழ். மாவட்டத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தின் புன்னாலைக்கட்டுவன், புத்தூக்ர், ஈவினை உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு வெங்காயச் செய்கை பாதிப்படைந்துள்ளது.

இயற்கை அழிவினால் பெருமளவான வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கான நஷ்டஈடு எதனையும் விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை எனவும் விவசாயிகள் கூறினர்.

மேலும், இந்த விவசாயச் செய்கைக்காக வங்கிகளிலிருந்து பெற்ற கடனையும் மீளச் செலுத்த முடியாது உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முன்னைய காலங்களில் இயற்கை உரங்களை பாவித்து பயிர் செய்வதால் மண்ணின் தரம் கெடாமல் இருந்தது. ஆனால் இப்போது பாவிக்கப்படுகின்ற செயற்கை உரங்களினால் மண்ணாணது நாளுக்குநாள் உயிர்த்தன்மையை இழந்து வருகின்றது.

இதனாலும் இந்தப் பகுதியில் இந்த முறை செய்யப்பட்ட வெங்காயத்தில் மூன்றில் இரண்டு பகுதி கிருமிகளின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதனால் யாழ். மாவட்டத்தில்; வெங்காய விலை சற்று அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts