Ad Widget

இராணுவத் தளபதிக்கு பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக பதவி உயர்வு

Jagath_Jayasuriya_armyதற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

தற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதானியான எயார் சீப் மார்ஷல் ரொசான் குணதிலக்க, ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்ட பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

1949ம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை இராணுவத்தின் 19ம் இராணுவத் தளபதியாக கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி ஜகத் ஜயசூரிய பதவியை ஏற்றுக்கொண்டார்.

நான்காம் ஈழப் போரில் ஜகத் ஜயசூரிய முக்கிய பங்காற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜகத் ஜயசூரிய, பொக்ஸிங், ஹொக்கி, கிரிக்கட் போன்ற விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் வன்னிக் கட்டளைத் தளபதியாக ஜகத் ஜயசூரிய கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை புதிய இராணுவ தளபதியாக தயா ரத்நாயக்க நியமனம்

daya-rathnayakeஇலங்கை இராணுவத்தின் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேஜர் ஜெனரல் பதவிநிலை வகிக்கும் தயா ரத்நாயக்கா, லெப்டினன் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts