Ad Widget

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அழகியற் பொருட் கண்காட்சி

Cakeவடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மகளீர் அபிவிருத்தி நிலையத்தினால் தையல் அழகியற் கலைப் பொருட் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிச் செயலர் பிறேமினி தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு பிரதம அதீதியாக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெ.சி.பெசிசியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்ற மாணவர்களின் தையல் பொருட்கள் மற்றும் அழங்காரப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்போது மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் பயிற்சியைப் பெற்றவர்களுக்கான சான்றிகழ்களும் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றி வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெ.சி.பெசிசியன் இந்த தையல் அழகுக் கலையினை டிப்ளோமா கற்கை நெறியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக 30 பேர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவ்வாறு டிப்ளோமா கற்கையினைப் பூர்த்தி செய்பவர்களுக்கு தொழில் பெறும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் பிரதேச செயலர் ம.பிரதீபன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளா,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், தையற் கலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts