Ad Widget

பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனால் விபத்துக்கள் அதிகரிப்பு!- யாழ்.பொலிஸ்

sunnakam-policeயாழ்.குடாநாட்டில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதனாலேயே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் அதிகாரி சமிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

யாழில் தினமும் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இந்த விபத்துக்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை. வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் வீதி போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்படுகின்றனர்.

விபத்துக்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழில் மக்கள் ஏன் விபத்துக்களைத் தவிர்ப்பதற்குரிய நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி வருகின்றனர்.

உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் விபத்துக்கள் யாழில் அதிகரித்து இருப்பது அண்மையில் நடைபெற்ற விபத்துக்களை அவதானிக்கும் போது தெரியவருகின்றது. வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்ற போதும் விபத்துக்களைத் தவிர்பதற்காக பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி வருவதாக யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் அதிகாரி சமிந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts