Ad Widget

வட மாகாண சபை தேர்தலில் இலாபம் தேட அரசாங்கம் முயற்சி: சிறிதரன் எம்.பி

Sritharanவட மாகாண சபை தேர்தலை நடத்தாது இலாபம் தேடும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“வட மாகாணத்தில் தேர்தல் நடாத்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அளிக்கப்படும் வாக்குகளை அபகரித்து இலாபம் தேடுவதற்காகவே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கான பலனை பெற்று சர்வதேசத்தினை ஏமாற்றும் நோக்கத்திற்காகவே வட மாகாணத்தில் தேர்தல் இல்லை என அறிவித்துள்ளது. அத்துடன், 30 வருட யுத்தத்தின் பின்னர் பல்வேறு அபிவிருத்திகளை செய்து விடுதலை புலிகள் என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள்.

விடுதலை புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவு காணப்பட்டது. இப்போது தமிழ் மக்கள் சீரழிந்து போகின்றார்கள். தேர்தல் மூலம் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளோம் என்றும் தமிழ் மக்கள் தம்மை ஆதரிக்கின்றார்கள் என்றும் சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காகவே அரசாங்கம் இதனைச் செய்கின்றது.

அதற்கு சர்வதேசம் தீர்வு வழங்கும் என்றும் அதேவேளை, ஜெனிவா திர்மானத்தினை அராசங்கம் 100 வீதம் நிறைவேற்றும் என்றும் எதிர்பார்க்க முடியாது. அத்துடன், இனி வரும் காலங்களில் உலக வரைபடத்தினை பார்த்தால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்து விடுவதை காணலாம் என்றும் அதற்கு தமிழ் மக்களும் சர்வதேசமும் கண் திறந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Related Posts