யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச்சபையில் கணக்குத் தேர்ச்சி பெற்ற குழாமிற்கு விண்ணப்பக் கோரிக்கை!

கூட்டுறவுச் சங்கங்களில் கணக்கு வைப்புகளின் மூலம் உரிய காலத்திற்குரிய பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கணக்குகளை இற்றைப்படுத்தி முடிவுறுத்துவதற்கு ‘கணக்குத் தேர்ச்சி பெற்ற குழாம்’ ஒன்றை அமைப்பதற்கு வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச்சபை இவ்வேலையினை மேற்கொள்ள பின்வரும் தகைமைகளை உடையவர்களை இக்குழாமில் இணைத்து, மேற்படி வேலைகளை உடனுக்குடன் முடிவுறுத்தி இற்றைப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றது:

  • ஓய்வு பெற்ற கூட்டுறவுச் சங்கங்களின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள்

  • ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவி ஆணையாளர்கள்

  • அரச கணக்காளர் சேவையில் ஓய்வு பெற்றவர்கள்

  • ஓய்வு பெற்ற கூட்டுறவுச் சங்கங்களின் கணக்குப் பதிவாளர்கள்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் இறுதித் திகதி

மேற்படி தகைமைகளைக் கொண்ட தரப்பினர் 05.12.2026 ஆம் திகதிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களைக் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்:

“கணக்குத் தேர்ச்சி பெற்ற குழாம்”

யாழ் மாவட்டக் கூட்டுறவுச்சபை கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம், இல. 12, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.

Related Posts