யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் இணையத்தள வடிவமைப்பு, Online மற்றும் Offline மென்பொருட்கள் மற்றும் Mobile Apps வடிவமைப்பு ஆகிய சேவைகளை கடந்த 22 ஆண்டுகளாக வழங்கி வரும் Speed IT Net நிறுவனத்தில் நிலவும் Marketing Executives (சந்தைப்படுத்தல் அலுவலர்கள்) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் சேவைகள் மற்றும் மென்பொருட்களை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் நேரடியாகவும், Digital Marketing ஊடகங்கள் வழியாகவும் சந்தைப்படுத்தும் ஆற்றல் கொண்ட துடிப்பான இளைஞர் மற்றும் யுவதிகளிடமிருந்து இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் கவர்ச்சிகரமான பேச்சாற்றலுடன் கூடியவராகவும், அடிப்படை கணினி அறிவு கொண்டவராகவும் இருத்தல் அவசியமாகும்.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித் தகைமையாக க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி அறிவு மேலதிக தகைமையாகக் கருதப்படும். இருபாலரும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், விண்ணப்பதாரர்களின் வயது எல்லை 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை சம்பளம், நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் தமது சுயவிபரக் கோவையை (CV) vacancy@speedit.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது
No: 136, Palaly Road, Parameswara Junction, Thirunelvely, Jaffna என்ற முகவரியில் அமைந்துள்ள Speed IT Net நிறுவன அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
