பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2026: இன்று முதல் இணையவழியில் பாடசாலை விருப்பத் தெரிவு

மேற்குறிப்பிட்ட ஆட்சேர்ப்புடன் தொடர்புடைய அழைப்புக் கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், பாடசாலைகளுக்கான விருப்பத்தைத் தெரிவிப்பதற்காகத் தகவல்களை உள்ளீடு செய்யும் நிகழ்நிலை முறைமை இணையவழி முறைமை தற்பொழுது தயார்படுத்தப்பட்டு வருவதுடன்,இன்று (17) முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும் Teacher Recruitment Application System இற்குள் பிரவேசித்து வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு விருப்பத் தெரிவினை வழங்க முடியும்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதன்போது, தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலுள்ள கடவுச்சொல்லுடன் (OTP) தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்து இம்முறைமைக்குள் பிரவேசிக்க வேண்டும்.

இதுவரையில் தங்களுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கிடைக்கப்பெறாவிடின், அக்கடிதம் கிடைக்கப்பெறும் வரையில் இம்முறைமைக்குள் பிரவேசிக்க முடியாது.

கடிதங்கள் கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாகச் சில விண்ணப்பதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையால், எவரேனும் ஒரு விண்ணப்பதாரருக்கு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் இதுவரையில் கிடைக்கப்பெறாவிடின், அது தொடர்பாகக் குழப்பமடைய வேண்டாம் எனவும், அவ்வாறு முறைமைக்குள் பிரவேசிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்குச் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ள திகதி வரையில் அம்முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தினமாகும் போது கடிதங்கள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களுக்குப் பாடசாலைகளுக்கான விருப்பத்தைத் தெரிவிப்பதற்காக நேர்முகப் பரீட்சை தினத்தன்று உரிய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts