கடந்த 02.11.2026 இரவு சைவ வித்தியா விருத்திச்சங்கத்தினால் நடாத்தப்படும் திருநெல்வேலி சைவச்சிறுவர் ஆண்கள் இல்லத்தின் மாணவன் ஒருவர் அங்கு இரவு கல்வி கற்பிக்க வந்த ஆசிரியரால் தாக்கப்பட்டு தலையில் காயமுற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது குறிப்பிட்ட ஆசிரியர் பதிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபையின் அனுமதி இன்றி அவர்களுக்கு அறிவிக்காமல் சைவ வித்திய விருத்திச்சங்கத்தின் கல்வித்திட்டப்பணிப்பபாளரும் சுகாதார வைத்திய அதிகாரியுமான Dr.பரா நந்தகுமார் அவர்களின் அனுமதியுடன் இல்லத்திற்குள் முறையற்ற விதத்தில் சங்கத்தினால் பணிக்கமர்த்தப்பட்டிருந்திருக்கின்றார். குறித்த ஆசிரியர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் அதே வேளை பகுதிநேரமாக இரவில் இல்லத்தில் கல்வி கற்பிக்க நியமிக்கப்பட்டிருந்திருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
இல்லத்தின் முகாமைத்துவ சபை செயலாளர் அந்த ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து சங்கத்தின் தலைவருக்கு அறிவித்திருந்தும் அதனை தட்டிக்கழித்து மறுதலித்து ஆசிரியரை தொடர்ந்து சங்க நிர்வாகம் பணிக்கு அனுப்பியுள்ளது.
இந்த பின்னணியில் மேற்படி தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில் சட்ட நடவடிக்கையினை தவிர்க்க மண்டை உடைந்த மாணவனை அருகில் இருந்த போதனா வைத்திய சாலைக்கு அனுப்பாமல் இணுவில் தனியார் வைத்திய சாலைக்கு அழைத்து சென்று ரூ 6000 வரை செலவழித்திருக்கின்றனர் .உடனடியாக சிறுவர் நீதிமன்று மற்றும் பொலிசுக்கு சம்பவம் அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. சிறுவர் நீதிமன்றின் ஊடாகவே இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு ஒன்றுக்காக சிறுவனை நீதி மன்றுக்கு அழைத்து சென்றவேளை நீதிபதி கேட்டதற்கு அது மேசை இடித்த காயம் என் சிறுவைனை சொல்ல வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து சிறுவர் நன்னடத்தை திணைக்களம் உயர்பீடம் அறிந்திருந்தும் , சங்கத்தின் செயலாளர் தவரூபன் ஆளுனரின் அபயம் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு முறைப்பாடு அளிக்கும் வரையில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது
முகாமைத்துவ சபைக்கு அறிவிக்காமல் எவரையும் இல்லத்துக்குள் அனுமதிக்க முடியாது அப்படி இருக்க எவ்வாறு திணைக்களம் இதனை அனுமதித்தது என்ற பல விடயங்கள் சுட்டிகாட்டப்பட்டு ஆளுனருக்கும் ,சிறுவர் திணைக்களத்திற்கும் சங்கத்தின் செயலாளர் தவரூபன் அவர்களால் முறைப்பாடளிக்கப்படதன் பின்னணியில்
09.11.2026 பொலிஸ் முறைப்பாடு இல்லத்தில் இருந்து பெறப்பட்டு விசாரணைகளின் பின் இன்று 11.11.2026 குறித்த ஆசிரியர் சிவநேசன் மயூரன் கைது செய்யபட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றார்
ஏற்கனவே சில மாதங்கள் முன்பாக மேற்படி சங்கத்தின் நிர்வாக முறைகேடுகளை் குறித்து நடவடிக்கை எடுக்க முயற்சித்த சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பொதுச்சபைச் செயலாளர் தவரூபன் மீது, நிர்வாகத்தைச் சேர்ந்த சிவரூபன் பணிப்பாளர் சபைக்கூட்டத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் அதன் பின்னராக பொதுச்செயலாரை தலைவர் செயற்படாமல் தடுத்து வைத்துள்ளதாகவும் சட்டவிரோதமாக பதில் செயலாளாக சிவரூபனை நியமித்து முறைகேடுகளை தொடர்வதாகவும் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது விடயத்தில் கல்வித்திட்டப்பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் எப்படி இல்லத்துக்குள் ஆசிரியரை சட்டவிரோதமாக அனுப்பினார் அதற்கு சங்கத்தின் தலைவர் சத்தியேந்திரா மற்றும் பதில் செயலாளர் சிவரூபன் எவ்வகையில் காரணமாயிருந்தனர் , தனியார் வைத்தியசாலைக்கு மாணவன் ஏன் அனுப்பப்பட்டார் . இல்லத்தின் பதில் முகாமையாளராக கடமையாற்றியிருந்த துசியந்தன் ஏன் மாணவனை இணுவில் வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார் யார் இந்த ஏற்பாடுகளை செய்தது?. எந்த வகையில் குறித்த ஆசிரியர் நியமனம் இடம்பெற்றது? , பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி எவ்வாறு அவருக்கான சம்பளம் நிதிச்செயலாளர் அருள்வேல் அவர்களால் வழங்கபட்டது?. ஆசிரியரின் தாக்கும் சம்பவங்கள் குறித்து தலைவருக்கு முறைப்பாடு செய்தும் தொடர்ந்து எவ்வாறு அவரை அனுமதிமதித்திருந்தனர்? சிறுவர் மற்றும் நன்னடத்தை திணைக்களம் ஏன் முதலில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை? என்ற விடயங்களை கண்டறிய விரிவான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் என சங்கத்தின் செயலாளர் தவரூபன் பணிப்பாளர் சபையினையும் உரிய திணைக்களங்களையும் கேட்டிருக்கின்றார்
கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆசிரியர் ரூ 3 லட்சம் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.