யாழில் போதைப்பொருள் பாவித்த சாரதிகள் கைது: குடும்பத்துடன் காரில் வந்தவரும் சிக்கினார்!!

யாழ்ப்பாணத்தில் வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்தார்களா என்பது தொடர்பான சோதனை நடவடிக்கையின் போது, குடும்பத்தினருடன் காரில் வந்தவர் உட்பட இரு சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வீதியில் பயணித்த வாகன சாரதிகள் 52 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையில், கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த நபர் ஒருவர் உட்பட இருவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களிலும் வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts