சீன் படத்தைப் பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!

நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். இதில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

சீன் திரைப்படம் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ. 145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவாக இந்த வசூலை ஈட்டியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது

இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “சீன் திரைப்படம் பார்த்தேன். மிக அருமையாகவும், ஸ்மார்ட்டாகவும், ஃபன்னாகவும் இருந்தது.

இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லென் சிறப்பாக நடித்துள்ளனர். ஜித்து மாதவன் இப்படத்தை சிறப்பாக எழுதி, இயக்கியுள்ளார். எல்லா வகையிலும் படம் சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts