பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் இணைந்த சேவையின் அலுவலக உதவியாளர் சேவையின் III ஆம் தரத்தில் நிலவும் 13 வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் திறைசேரி, மாவட்டச் செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழ் காணப்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

வெற்றிடங்களின் விபரம் :
யாழ்ப்பாணம் காணிப் பதிவகத்தில் 04 வெற்றிடங்களும், கிளிநொச்சி காணிப் பதிவகத்தில் 02 வெற்றிடங்களும், முல்லைத்தீவு காணிப் பதிவகத்தில் 03 வெற்றிடங்களும், வவுனியா காணிப் பதிவகத்தில் 01 வெற்றிடமும், மன்னார் காணிப் பதிவகத்தில் 01 வெற்றிடமும் காணப்படுகின்றன. அத்துடன், வவுனியா பதிவேட்டறை (காப்பகம்) பிரிவில் 02 வெற்றிடங்களும் உள்ளடங்கலாக மொத்தம் 13 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

பதவியின் தன்மையும் நிபந்தனைகளும் :
இப்பதவியானது நிரந்தரமானதும் ஓய்வூதிய உரித்துடையதுமான பதவியாகும். நியமனம் பெறுபவர்கள் மூன்று வருட தகுதிகாண் காலத்தில் பணியாற்ற வேண்டும்.
அரச சேவை நியமன நடைமுறைகள், அரசகரும மொழிக் கொள்கை மற்றும் தொடர்புடைய அரச நிர்வாகச் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக நியமனங்கள் வழங்கப்படும்.
அலுவலகக் கோப்புகள் மற்றும் ஆவணங்களைக் கையாளுதல், கடிதங்கள் மற்றும் அலுவலகப் பொருட்களை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட அலுவலக நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது இப்பதவியின் முக்கிய கடமைகளாகும்.

விண்ணப்பதாரர்கள் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பதுடன், அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 நவம்பர் 20ஆம் திகதி.
விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
பதிவாளர் நாயகம்,
பதிவாளர் நாயகம் திணைக்களம்,
இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்லை.

Related Posts