தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகர் காலமானார்: குடும்பத்தினருடன் நேரில் அஞ்சலி!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகர், வயது மூப்பு காரணமாக இன்று (30) காலமானார்.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த சகோதரரின் மனைவியான அமல் ராஜசேகர், வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது மறைவுச் செய்தியறிந்த முதலமைச்சர் விஜய், உடனடியாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், விஜய்யின் பெற்றோரும் அமல் ராஜசேகரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Related Posts