பாணின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!!

450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Related Posts