AI முதலீடுகளை அதிகரிக்க 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகை: மைக்ரோசோப்ட் அதிரடி!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பிரம்மாண்டமான முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசோப்ட் (Microsoft) நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் கால் பங்கிற்கும் அதிகமான, சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து விலகும் திட்டத்தை (Voluntary Buyouts) அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், AI உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையின் கீழ் AI அனுபவங்கள், கோபைலட் (Copilot), நிதி, மனிதவளம், எக்ஸ்பாக்ஸ் (Xbox) மற்றும் விண்டோஸ் + டிவைசஸ் ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தைப்படுத்தல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, மைக்ரோசோப்டும் AI தரவு மையங்கள் மற்றும் சிப்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான தனது மூலதனச் செலவினமாக 175 பில்லியன் டாலர்களை இந்நிறுவனம் கணித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2,23,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டுள்ள மைக்ரோசோப்ட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் 9,000 ஊழியர்களுக்கு இதேபோன்ற விருப்ப ஓய்வுத் திட்டத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts