செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் வணிக வளர்ச்சியை அடைவது குறித்தும், வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவது குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (SMEs & MSMEs) விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கும் விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (Northern Chamber of Information Technology – NCIT), MOSAIC Venture Network, Curve Up மற்றும் AZE IT TECH ஆகியவை Google.org, ADB மற்றும் AVPN ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் இணைந்து இந்தப் பயிற்சிப் பட்டறையை முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கின்றன
இன்றைய நவீன தொழில் நுட்ப உலகில் AI பயன்பாடு வணிக வளர்ச்சிக்கான மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், நேரத்தைச் சேமிக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த பயிற்சி வழிகாட்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பயிற்சிப் பட்டறை விபரங்கள்:
-
திகதி: சனிக்கிழமை, 17 ஒக்டோபர் 2026
-
நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
-
இடம்: RhaRay Mall, ஆடியபதம் வீதி, யாழ்ப்பாணம்
-
கட்டணம்: அனுமதி முற்றிலும் இலவசம்
முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் இங்கே கிளிக் செய்து கூகுள் படிவத்தின் மூலம் உடனடியாகத் தங்கள் பதிவுகளை மேற்காள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.