காங்கேசன்துறை முதலீட்டு வலயம்: 187 ஏக்கர் காணி மட்டுமே முதற்கட்டமாக விடுவிப்பு!

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் நேற்றைய தினம் (30.09.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்களின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் மற்றும் மேஜர் WMKK. வீரக்கோன் (Major WMKK.Weerakoon) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts