இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka – CBSL), ஒப்பந்த அடிப்படையில் RED Team Specialist பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.
பதவி விவரங்கள்:
-
பதவியின் பெயர்: RED Team Specialist (On Contract Basis)
-
வேலைப்பணி: சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் (RED Team Testing, Breach & Attack Simulation, Threat Hunting).
-
சேவைக்காலம்: அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையிலான ஒப்பந்த அடிப்படையில்.
-
சம்பளம்: பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது (Negotiable) + EPF / ETF கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
தகைமைகள் (Qualifications):
-
கல்வித் தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தகவல் பாதுகாப்பு (Information Security), கணினி அறிவியல் (Computer Science), கணினிப் பொறியியல் அல்லது IT துறையில் இளமானி (Bachelor’s) அல்லது முதுமானி (Master’s) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
தொழில்முறைச் சான்றிதழ்கள் (Professional Certifications): OSCP, OSWE, OSEP, CEH, CPT, eCPPT, GPEN, GWAPT ஆகியவற்றில் ஏதேனும் சான்றிதழ்கள் வைத்திருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
-
வயதெல்லை: 2026 அக்டோபர் 31 ஆம் திகதியன்று 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் திகதி: 31 அக்டோபர் 2026
-
ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு: https://www.cbsl.gov.lk/en/careers