புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!!

MGR biopic film ஆக உருவாகும் ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ திரைப்படத்தில், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இவர் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர்.

நடிப்பு, அரசியல், மக்கள் சேவை ஆகிய தளங்களில் தனித்துவமான வரலாற்றை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த அவர், அ.தி.மு.க. என்ற கட்சியைத் தொடங்கி தேர்தல் அரசியலில் களம் கண்டார். பின்னர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று, தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.

இந்த MGR biopic film, அவரது வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் நேரடி அனுபவங்களையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், சக நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் அனுபவங்களும் இதில் இடம்பெற உள்ளன.

எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கிய அக்டோபர் 17-ம் தேதி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தில் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட முக்கிய திரைப்படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts