இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் அடிப்படையில் இலங்கை அணி இந்தப் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1 – 1 என கணக்கில சமன் செய்ததன் மூலம், இலங்கை அணி இத்தொடரில் வெற்றி கொள்ளவதற்கான நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தத் தொடரில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், 100 பந்துகளில் 121 ஓட்டங்களை பெற்றார்.
இது அவரது 7 வது ஒருநாள் சதம் என்பதுடன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் சதம் ஆகும்.