வடமாகாணத்தில் இரு நாட்களுக்கு மின்விநியோகம் தடைப்படும்!! : மின்சார சபை அறிவிப்பு

மன்னார் 220kV மின் பரிமாற்ற வழித்தடத்தை மாற்றியமைக்கும் (Reconductoring) சீரமைப்புப் பணிகள் காரணமாக, வடமாகாணத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் ஒக்டோபர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் தற்காலிகமாக மின்சார விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

  • 02.10.2026 வெள்ளிக்கிழமை: மதியம் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை

  • 03.10.2026 சனிக்கிழமை: மதியம் 12.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை

குறிப்பிட்ட இந்த நேரப் பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இந்த மின்தடங்கலைக் கவனத்திற் கொண்டு, தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை முன் கூட்டியே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts