ஜெயிலர் 2-வுடன் மோத முடிவெடுத்த ஜீவா, விஜய் ஆண்டனி

ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்த படம். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக இரண்டாம் இடத்தில் ஜெயிலர் உள்ளது.

இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் இந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது, கண்டிப்பாக இந்த படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஜெயிலர் 2-வுடன் வேறு எந்த படங்களும் வராது, சோலோ ரன் ஆக இருக்கும் என நினைத்த நிலையில், தற்போது இரண்டு திரைப்படங்கள் ஜெயிலருடன் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஜெயிலர் 2 ரிலீஸாகிய அடுத்த நாள் அக்டோபர் 16-ம் தேதி, ஜீவா நடிப்பில் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’, விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’ ஆகிய இரண்டு படங்கள் வரவுள்ளன; இந்த ஆயுத பூஜை விடுமுறைக்கு ரசிகர்களுக்கு செம விருந்துதான், இதில் எந்த படம் ஹிட் ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts