யாழ்ப்பாணம் அரியாலை, செம்மணி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) டிப்பர் வாகனமும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தின் போது காரில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்