சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள 13 தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதுள்ள மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளை நடத்துவது அல்லது விடுமுறை அளிப்பது குறித்த முடிவை எடுக்கும் உரிமையை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு வழங்கியிருந்தனர்.
அந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள ஏனைய பாடசாலைகளின் கற்பித்தல் செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.