யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைவாய்ப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  வெற்றியடமாகவுள்ள கல்விசாரா ஊழியர் (Non-Academic) நிரந்தரப் பணியிடங்களுக்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து இணையவழி (Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. வெற்றிட விபரங்கள் (Posts & Vacancies)

  • துணை விடுதிப் பொறுப்பாளர் (Sub Warden – Full Time, Grade II): 02 இடங்கள்

  • கால்நடை உதவியாளர் (Livestock Assistant, Grade III): 01 இடம் (விவசாயப் பீடம்)

  • செவிலியர் அதிகாரி (Nursing Officer, Grade II): 01 இடம்

  • கருவி பராமரிப்பாளர் மற்றும் பழுதுபார்ப்பவர் (Instrument Caretaker cum Repairer, Grade III): 02 இடங்கள்

  • தோட்டக்காரர் (Gardener, Grade III): 01 இடம் (விவசாயப் பீடம்)

  • களஞ்சியக் காப்பாளர் (Storeman, Grade III): 02 இடங்கள் (விவசாயப் பீடம் மற்றும் பொறியியல் சேவைப் பிரிவு)

  • பிரேதப் பரிசோதனை ஊழியர் (Postmortem Labourer, Grade III)

2. முக்கிய விபரங்கள்

  • விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • இணையத்தளம்: www.jobs.jfn.ac.lk

  • கடைசி நாள்: 14 செப்டம்பர் 2026

3. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  1. www.jobs.jfn.ac.lk இணையத்தளத்திற்குச் சென்று உரிய கணக்கை உருவாக்கி ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

  2. தேவையான கல்வி, தொழில்சார் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் பிரதிகளை பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.

  3. விண்ணப்பக் கட்டணத்தை மக்கள் வங்கியில் (People’s Bank) பல்கலைக்கழகக் கணக்கில் நேரடியாகவோ அல்லது Online Banking மூலமாகவோ செலுத்தலாம்.

  4. அரச அல்லது பல்கலைக்கழக ஊழியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் தரவிறக்கம் (Download) செய்து, நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

4. மேலதிக தொடர்புகளுக்கு:

  • தொலைபேசி: 021 222 8566

  • மின்னஞ்சல்: jobs@univ.jfn.ac.lk

Related Posts