பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட் (Paranthan Chemicals Company Limited) நிறுவனத்தில் வெற்றிடமாகவுள்ள ‘கணக்கு அதிகாரி’ பதவிக்குத் தகுதியான இலங்கை மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகுதிகள்:
-
வெளிவாரி விண்ணப்பதாரர்கள்:
-
UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வர்த்தகம், கணக்கீடு, நிதி அல்லது வணிக நிர்வாகம் (நிதி/கணக்கு) ஆகிய துறைகளில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
-
அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் தொழில்சார் நிறுவனத்தின் (Chartered Institute) இடைநிலைத் தேர்வில் (Intermediate Exam) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
-
உள்வாரி விண்ணப்பதாரர்கள்:
-
மேற்சொன்ன கல்வித் தகுதியுடன், ‘Management Assistant-Non-Technological’ (MA1-2) தரம் II பதவியில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் திருப்திகரமான சேவை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
-
வயது எல்லை:
-
22 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். (நிறுவனத்தின் உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது எல்லைப் பொருந்தாது).
சம்பளம் & நன்மைகள்:
-
சம்பள அளவுத்திட்டம் (JM 1-1): ரூ. 72,650 – (1,360 x 10) – (2,040 x 18) – ரூ. 122,970/-
-
மேலதிகமாக EPF (15%) மற்றும் ETF (3%) பங்களிப்புகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தமது சுயவிவரக் கோவை (CV), கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள் மற்றும் இரண்டு நன்மதிப்புச் சான்றாளர்களின் (Referees) விபரங்களுடன் பதிவுப் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
கடித உறையின் மேல் இடது மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடவும். அரச நிறுவனங்களில் பணியாற்றுவோர் தமது நிறுவனத் தலைவர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02 செப்டம்பர் 2026
-
தொடர்பு எண்கள்: 0112324466, 0112324465
மேலதிக விபரங்களுக்கு- https://pccl.lk/careers/