ஜனநாயகன் சாதனை!!

ஜனநாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பதால், கடைசி முறையாக தளபதியின் FDFS காட்சியை பார்க்க ரசிகர்கள் எமோஷ்னலாக வந்திருந்தனர்.

ஜனநாயகன் படம் முதல் நாளில் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன தமிழ் படம் என்கிற சாதனையை படைத்து இருக்கிறது.

முதல் நாளில் 580 தியேட்டர்களில் 1050க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ஜனநாயகன் படம் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன படம் என்றாலும் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிவதால் முதல் நாளில் பெரிய வசூல் வந்திருக்கிறது.

சென்னையில் மட்டும் 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வந்திருக்கிறது. விஜய்யின் கடைசி படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

Related Posts