ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருந்த அந்த படத்திற்கு விருது கிடைத்ததற்கு சினிமா துறையினர் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
தற்போது நடிகை சாய் பல்லவி மிகவும் உருக்கமாக அமரன் படம் பற்றி பேசி ராஜ்குமார் பெரியசாமிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.
என் இதயம் நிறைந்துவிட்டது. இது எளிதான பயணம் அல்ல. சொல்ல நினைத்ததை உறுதியாகவும், மதிப்புடனும் அனைத்தையும் கையாண்டு இருந்தீர்கள்.
இதை எழுதும்போது நான் எமோஷ்னலாக தான் இருக்கிறேன். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்,ராஜ்குமார் பெரியசாமி, உங்கள் வெற்றியை என்னுடையது போல கொண்டாடுகிறேன்.
இவ்வாறு சாய் பல்லவி கூறி இருக்கிறார்.