காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசாவின் வடக்கில் உள்ள துஃபா பகுதிக்கு அருகே நடந்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், கிழக்கு காசா நகரின் ஸைத்தூன் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த பீரங்கித் தாக்குதலில் மூன்றாவது நபர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு காசா நகரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடார முகாம் மீது நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர். அதேநேரம், தெற்கில் உள்ள கான் யூனிஸில் ஒரு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொருவர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் ஒரு குடியிருப்பு கட்டடம் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.