The HALO Trust நிறுவனத்தில் சாரதிகளுக்கான வேலைவாய்ப்பு!!

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற சர்வதேச மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ‘ஹலோ ட்ரஸ்ட்’ (The HALO Trust), இலங்கையில் காலியாகவுள்ள சாரதி (Driver) பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

உலகளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிலத்தை மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகிறது.

இப்பதவிக்கான முழுமையான விபரங்கள் வருமாறு:

பதவி மற்றும் பணி விபரங்கள்:
பதவி பெயர்: சாரதி (Driver)பணிபுரிய வேண்டிய இடங்கள்: கிளிநொச்சி, முகமாலை, கொக்குத்தொடுவாய்.அறிக்கையிடல்: வாகனப்பகுதி முகாமையாளர் (Fleet Manager).

சாரதியின் முக்கிய கடமைகள்:

  • ஹலோ பணியாளர்கள், கருவிகள் மற்றும் பொருட்களைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சரியான நேரத்தில் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது.
  • ஏதேனும் ஏற்றுதல் அல்லது இறக்குதல் கடமைகளை மேற்கொள்வதற்கு முன் முகவரிகள் மற்றும் பிற போக்குவரத்து விபரங்கள் சரியானவையா என்பதை உறுதி செய்தல்.
  • பணியாளர்களின் கருவிகள் மற்றும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு உதவுதல்.
  • போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துதல்.
  • ஹலோ வாகனங்களை எப்போதும் அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்களில் நிறுத்துதல்.
  • வாகனங்களை நாளாந்தம் துப்புரவு செய்தல், கழுவுதல் மற்றும் பராமரித்தல்.
  • முதல் வாகன அணிவகுப்புச் சோதனை மற்றும் ஹலோ வாகனங்களின் வழக்கமான சோதனைகளைச் செய்தல்.
  • வாகனக் காப்புறுதி மற்றும் வரிகள் உட்பட சட்ட ரீதியான ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்தல்.
  • வாகனப் பதிவுப் புத்தகத்தைப் பராமரித்தல், கிலோ மீட்டர் போய் வந்த இடங்கள், இறுதி இடங்கள் மற்றும் எரிபொருள் வழங்கல், பயன்பாடு மற்றும் நுகர்வு உட்பட வேலை நேரத்தைப் பதிவு செய்தல்.
  • ஹலோ வாகனத்தில் போய் வரும் சரியான நேரத்தினைப் பதிவு செய்து வழங்குதல்.
  • ஏதேனும் விபத்துக்கள், காயங்கள் மற்றும் வாகனச் சேதங்கள் ஏற்படின் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு அறிவித்தல்.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட பதவிநிலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், தங்கள் சுயவிபரக் கோவைகளை (CV) வரும் 17 ஜூலை 2026 வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக கீழ்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

HR Manager
The HALO Trust,
450 Thirunagar West,
Kilinochchi, Sri Lanka.

மின்னஞ்சல் (Email): hr@halosrilanka.org
தொலைபேசி: +94 (0) 212 285 466
இணையதளம்: www.halotrust.org / mail@halosrilanka.org / vanni@halosrilanka.org

Related Posts