சிகரம் கல்வி தொழில் விசா சேவை யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் ஆரம்பமானது!

15 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி, தொழில், விசா சேவை அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனத்தின் செயற்பாடுகள், யாழ் நகர மத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், முன்னாள் நெல்லியடி மகாவித்தியாலய அதிபர் கலாநிதி சேதுராஜா, யாழ் பல்கலைக்கழக சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன் உள்ளிட்ட, யாழ் வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் உள்ளிட்ட பல கல்வி மற்றும் தொழிற்றுறைசார் முன்னணி பிரமுகர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு, சிகரம் நிறுவுநர் கோ.றுஷாங்கன் தலைமையில் நடைபெற்றது.

சிகரம் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த கல்வி – தொழில் வழிகாட்டி சேவை தொடர்பாக நிறுவுநர் கோ.றுஷாங்கன் அவர்கள் தெரிவிக்கையில்..

தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் எப்போதுமே சிரமங்களை எதிர்கொள்ளும் க.பொ.த. உயர்தர கலைத்துறை கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு, தொழில் உத்தரவாதமான முறையில் கலைத்துறை வகுப்புகளை நடாத்தும் College of Arts என்கின்ற கலைத்துறை கல்லூரியின் செயற்பாடுகள் இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்,

ஏலவே பல வருடங்களாக சிகரம் நிறுவனம் நடாத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்-யுவதியருக்கு உள்நாட்டு – வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கிய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கைநெறியின் 13வது அணி, புதிதாக ஆரம்பிக்கவுள்ள ஊடகம் – ஒளிப்படக்கலை – சினிமா இணைந்த கூட்டுக் கற்கைநெறி,உயர்கல்வியைத் தொடரவும், தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் இளையோருக்கு பெரும் சவாலாக இருந்துவரும் ஆங்கிலமொழித் தொடர்பாடலை இலகுவாக்கும் புதிய அணுகுமுறையிலான ஆங்கிலக் கற்கைநெறி, வெளிநாட்டுக் கல்வியில் ஆர்வம் கொண்டோருக்கு அவுஸ்ரேலியாவின் உயர்தர பல்கலைக்கழகமான Curtin University க்கான வடக்கு மாகாண முடவர் சேவை,
என்பனவும் இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

யாழ் நகரின் மத்தியில், பேரூந்து நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள, அமைதியான, விஸ்தீரணமான நிலப்பரப்பு, கட்டட வசதிகள் கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவு வளாகத்தில் சிகரம் நிறுவனத்தின் அனைத்துச் சேவைகளையும்,
இனிவரும் காலங்களில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் – யுவதியர் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Related Posts