எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சூரிய மின் படலத்தை துண்டிக்க வேண்டுகோள்!!

மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை,கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த மின் கட்டமைப்புகளைச் நிறுத்தி வைப்பதன் மூலம், கடந்த வெசாக் பண்டிகை தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.

Related Posts