வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் !!

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பல வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை வேலையில்லாப் பட்டதாரிகள் முன்னெடுத்தனர்.

அத்துடன் அவர்கள், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாவிடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

Related Posts