சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, அவரது உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனைத் தூக்கி வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண ஆளுநரால் வர்த்தமானி ஊடாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், “ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தியதற்காக அவரின் பதவியைப் பறிப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயலாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.